Recent Posts

சிவ புராணம் - சேதுக்கரை இராமேசுவரர்

சிவ புராணம்
சேதுக்கரை இராமேசுவரர்




அயோத்தி மன்னரும், தந்தையுமான தசரத சக்கரவர்த்தியின் வார்த்தையைக் காப்பாற்ற ஸ்ரீராமன், தம்பி லக்ஷ்மணனுடனும், மனைவி சீதையுடனும் காட்டுக்கு வந்தார். பஞ்சவடிதீரத்தில் அவர்கள் இருந்து வரும் போது, இலங்காதிபதியான இராவணேசுவரன் சீதையைக் கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறை வைத்தான்.

அரக்கனை அழித்து, மனைவியை மீட்டுவர ஸ்ரீராமன் வானர சேனைகளுடன் சேது சமுத்திரக் கரையை அடைந்தார். சமுத்திரத்தைக் கடப்பதற்கான மார்க்கத்தை அறிய எண்ணம் கொண்டவராய் வானரவீரர்களுடன் சில நாட்கள் அங்கே தங்கினார்.

ஒரு நாள் அவருக்குத் தாகமாக இருக்கவே ஜலம் கொண்டு வருமாறு அருகிலிருந்தவரைக் கேட்டார். வானர வீரர்கள் ஓடிச் சென்று புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்து அவர் முன்பு வைத்தனர். சிவபூஜை செய்யாமல் அவர் எதுவும் உண்ணுவதில்லை. புண்ணிய தீர்த்தத்தைக் கண்டதும் சிவபூஜை செய்ய அவருக்கு எண்ணம் உண்டாயிற்று.

மண்ணைக் கொண்டு வந்து சிவலிங்கம் செய்து அதைப் பிரதிஷ்டை செய்தார். அபிஷேகம் முதலானவை செய்து மலர்களால் அர்ச்சித்தார்.

சர்வேச்வரன் அவருடைய பூஜைக்கு மகிழ்ந்து அவர் முன்பு தோன்றினார்.

ஸ்ரீராமா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்? நான் தருகிறேன்" என்றார்.

கைலாசநாதனைப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்த ஸ்ரீராமன் பிரபோ, இந்த சமுத்திரத்தைக் கடந்து செல்லும் சக்தியை எங்களுக்கு அளிக்க வேண்டும். இராவணன் தங்கள் பக்தன். எனக்கு இழைத்த அபசாரத்துக்காக அவனைத் தண்டிக்க வந்துள்ளேன். என் விருப்பம் தடையேதுமின்றி நிறைவேற அனுக்கிரகம் செய்ய வேண்டும் இதுவே என் கோரிக்கை" என்று பிரார்த்தித்தார்.

ஸ்ரீராமா! இராவணன் என்னுடைய பக்தனாக இருந்தாலும் முன்பு ஒரு சமயம் கைலயங்கிரியைப் பெயர்த்து எடுத்து எனக்கு அபசாரம் செய்ததற்காக, உன்னால் அழிக்கப்பட ஒரு சாபம் கொடுத்துள்ளேன்" என்று கூறிய ஈசன், ஸ்ரீராமன் கோரிய வரங்கள் நிறைவேற அனுக்கிரகம் செய்து அவரால் பூஜிக்கப்பட்ட லிங்கத்தில் இராமேசுவரர் என்ற பெயரோடு சாந்நித்தியம் கொண்டார்.


இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை