Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - வரதம்பட்டு – மாங்கல்ய வரமருளும் மாரியம்மன்

மஹா மாரியம்மன் 
ஆடி மாத சிறப்புகள்

வரதம்பட்டு – மாங்கல்ய வரமருளும் மாரியம்மன் 




வைத்தீஸ்வரன் கோயில்-பந்தநல்லூர் பேருந்து தடத்தில் உள்ள மணல் மேட்டிற்கு தென்கிழக்கே உள்ளது இந்த ஆலயம். கும்பகோணத்திலிருந்து பந்தநல்லூர் சென்றும் இவ்வாலயத்தை அடையலாம். 

பசுமை போர்த்திய அழகிய கிராமம். நெல்லும், கரும்பும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை காற்றில் அலைகின்ற இயற்கை எழில் சூழ்ந்த கிராமத்தில் அருள் எழிலோடு புன்னகை தவழ கருவறையில் வீற்றிருக்கிறாள் மாரியம்மன். பேச்சாயி அம்மன் உக்கிர கோலத்திலும், வீரன் கையில் வாளுடனும் காட்சி தருகின்றனர். 

பங்குனி உத்திரதினத்தன்று ஊரே திருக்கோலம் பூண்டிருக்கும். நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுப்பர். பால்குடம், தீச்சட்டி எடுத்து வருவர் மக்கள். அன்று நடைபெறும் பாலாபி‌ேஶகம் கண்கொள்ளாக் காட்சி. அன்னைக்கு எதிரேயுள்ள நீண்ட வீதியில் மாவிளக்கு இட்டு தீபமேற்றி தெருவேதீபஅலங்காரத்தில் ஜொலிக்கும். 

அம்மை நோய் கண்டவர்களுக்கு அம்மனின் அபி‌ேஶகப் பாலை பருகச் செய்தால் நோயின் வெம்மை குறைந்து விரைவில் குணமடைவர். ஆடி, தை மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் திருவீதி உலா வருவதுடன், மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் வரும் காணும் பொங்கல் அன்று கோயிலுக்கு முன் பொங்கல் வைத்து வேண்டுபவர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் கருணை மாரி அவள். 

தங்களுக்குத் திருமணம் நடைபெறவேண்டுமென்றும், தங்களின் தாலி பாக்யம் நிலைக்க வேண்டுமென்றும் இங்கு நேர்ந்து கொள்பவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறாள் அன்னை. 

திருமண வரம் தருவதில் அன்னைக்கு நிகர் அவளேதான். அதனால் மாங்கல்ய வரமருளம் தேவியாக மக்கள் போற்றுகின்றனர். 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை