Recent Posts

மஹா மாரியம்மன் - ஆனைமலை - மாசாணியம்மன்

மஹா மாரியம்மன் 

ஆனைமலை - மாசாணியம்மன்   





அகிலமெல்லாம் அருளாட்சி செய்யும் அன்னையின் மற்றொரு உருவம் மாசாணித்தாய். தாங்கள் குடியிருக்கும் மனைகளை, தங்கள் பாட்டன், முப்பாட்டன் காலத்திய விளைநிலங்களை விமான நிலையத் திற்காக அரசாங்கம் கையகப்படுத்த முனைந்த போது கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் மக்கள் நம்பியது அன்னை மாசாணித் தாயை மட்டுமே. 
இங்குள்ள நீதி தேவதைக்கு மக்கள் தங்கள் குறைகளைச்  சொல்லி மிளகாய் அரைத்து பூசுவார்கள்.

அம்மன் அனுக்கிரகத்தால் அவர்களுக்குத் தீயவர்களை அடையாளம் காட்டி நல்லதே நடந்தேறச் செய்வாள். கோர்ட்டு, வாய்தா எல்லாம் இவள் முன்னே எம்மாத்திரம்? அவ்வாறே இம்மக்கள் அருள்பாலிக்கும் நீதி தேவதையின் மேல் மிளகாய் அரைத்து பூச நில ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டது. 

வஞ்சகன் ஒருவன் குமாரபாளையம் ஊரையே விஶம் வைத்து அழிக்க நினைத்து, பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் விஶம் கலந்துவிட, ஏதோ, சினிமாவில் வரும் சம்பவம் போல தோன்றுகிறதா? ஆனால் இது உண்மையாக  நடந்தது. விஶம் கலந்தது யார் என்று கண்டுபிடிக்க இதே போல மிளகாய் அரைத்து பூசவும் பாதகன் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டான். 

ஆயிரக்கணக்கான  பக்தர்களை தீங்கிலிருந்து காப்பாற்றுகிறாள் இத்தாய். அம்பாள் குடியிருப்பது பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ. தொலையில் இருக்கும் ஆனைமலையில். வடக்கே காலும், தெற்கே தலையும் வைத்து பிரம்மாண்ட உருவமாய் படுத்திருக்கிறாள் அன்னை. இவளது திருமேனி ஆற்று மண்ணால் ஆனது. அதன் மீது சுதை பூசப்பட்டுள்ளது. அவளது தீர்க்கமான கண்கள் அனைவரையும் அருள்கடாக்ஷத்துடன் ஆட்கொள்ளும். மாசானம் என்றால் மயானம். மயானத்தில் இருக்கும் அன்னை 'மாசாணியம்மன்’ மாசாணியம்மன் எப்படி நீதி வழங்கும் தேவதையானாள்? 

நன்னன் - முன்னொரு காலத்தில் நன்னனூர் நாடாக இருந்த இப்பகுதியை ஆண்டு வந்த நன்னனின் தோட்டத்தில் விளையும் மாம்பழம், மிகுந்த சுவை உடையதாக இருக்கும். அரச குடும்பத்தை தவிர வேறு யாராவது அதைத் தொட்டால் மரண தண்டனைதான். ஒரு சமயம் அரச தோட்டத்து மாம்பழம் ஒன்று ஆற்றில் மிதந்து வந்தது. குளித்துக் கொண்டிருந்த கன்னி ஒருத்தி அதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டாள். மாம்பழத்தைத் தேடியபடியே ஆற்றோரம் நடந்து வந்த அரண்மனை வீரர்கள் அவளைப் பிடித்து அரசனிடம் ஒப்படைக்க அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  ஆற்றில் மிதந்து வந்த மாம்பழத்தை யாருடையதென்று அறியாமால் உண்டதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா? மயானத்திலிருந்து வெகுண்டு எழுந்த அந்த பெண்தான் மாசாணியம்மனாக உருவெடுத்து தன்னைப்போல நீதியால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குகிறாள். பாதகம் செய்கிறவரை அதிரடியாக தண்டிக்கிறாள். 

மற்றொரு புராணக்கதை என்ன தெரியுமா? சபரிபீடம் நோக்கி வந்த ராமர், தன் கையால் ஆற்று மணலில் உருவாக்கி வழிப்பட்ட அன்னைதான் தற்போது இருக்கும் ிமாசாணி’ என்கிறது. 

இத்திருக்கோயிலுக்கு வந்தாலே ஆணவம் அடங்கும். அன்பு பெருகும். தலைக்கு வரும் துன்பம் தலைப்பாகையோடு போகும். இவளோட முடிக்கயிறு கட்டிக்கொண்டாலே தீங்கு எதுவும் நெருங் காது. அந்த நம்பிக்கையினால்தான் லட்சக்கணக்கானோர் வந்து அம்பிகையை வேண்டிச் செல்கின்றனர். அம்பாளிடம் வேண்டுவன யாவும் 90 நாட்களுக்குள் நிறைவேறுகிறது. அபலைப் பெண்கள் கதறி அழுவதைப் பார்க்க முடியாது அன்னையால். மனம் பொறுக்காது. உடனே தீர்வு அளித்துவிடுவாள். மிளகாய் சாந்து சாற்றி பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்பாளுக்கு எண்ணெய் காப்பு செய்து பிரார்த்தனைகளை முடிப்பது நல்லது. 

பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கு சிவப்பு உதிரமாலை வாங்கி சார்த்தி பின் கோவில் பிரசாதம் உண்டு வழிபட்டால் (சந்நதியில் தரும் மூலிகை மருந்து) பிரச்சனை நீங்குகிறது. வெள்ளைபடுதலுக்கு வெள்ளை நிற உதிரமாலை”. 

வேண்டுதல் பலிக்க சீட்டு எழுதிக் கட்டுதலும் இங்கு முக்கிய பிரார்த்தனை. வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்பாள் பாதத்தில் சேர்த்துவிடுவார். நம் வேண்டுதல்கள் 90 நாள்களுக்குள் நிறைவேறிவிடும். பின் அம்மனுக்கு அபி‌ேஶகம் செய்ய வேண்டும். புடவை சார்த்துதல், தங்க மலர் அர்ச்சனை, எலுமிச்சம்பழ வழிபாடு, முடி காணிக்கை, முடிகயிறு வாங்கிக் கட்டுதல் என்று பலவிதமான வழிபாட்டு முறைகளும் வழக்கத்தில் உள்ளன. 

பொள்ளாச்சியிலிருந்து நிமிடத்திற்கு ஒரு நகரப் பேருந்து கோவில் வாசலுக்கு வந்து செல்கிறது. பொள்ளாச்சி, திருச்சூர் சாலையில் எட்டாவது கி.மீ-ல் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. அம்பரா பாளையத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும். காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை கோவில் திறந்திருக்கிறது. 

மிளகாய் சாற்றுவது நீதி தேவதையின் மேல் என்றால் சாமான்யமா? வீட்டில் மிக்ஸி, கிரைண்டர் இதில் அரைக்கும் நமக்கே மிளகாய் காரம் எப்படி எரியும்? அம்மம்மா! நினைத்தே பார்க்க முடியவில்லை. அம்பாள் தன் மக்களுக்காக எத்தனை கஶ்டங்களை சுமக்கிறாள்? ஒருவரா, இரண்டு பேரா நீதி தேவதையை கல்லாக எண்ணாமல் எலும்பும், சதையும் உள்ள மனித ரூபமாகக் கொண்டால் அவளது கஶ்டம் சொல்லிலடங்கா. நமக்கு ஒன்று நல்லது நடக்க வேண்டும் என்றால் நம் அம்மா எவ்வளவு கஶ்டங்களை சுமக்கிறாள்.



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை