Recent Posts

திருவிளையாடல் புராணம் - உக்கிர பாண்டியன் பிறப்பு

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள் 

உக்கிர பாண்டியன் பிறப்பு




      திங்கட்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் மீனாக்ஷிக்கும், சொக்கநாதருக்கும் முருகப் பெருமான் மகனாகப் பிறந்தார்.  பன்னிரண்டாம் நாள் ’உக்கிரன் எனப் பெயர் சூட்டினார் சோமசுந்தரப் பெருமான்.  அன்று சிறையிலிருந்த வருக்கெல்லாம் விடுதலை! சுந்தரப்பாண்டியன் பொன்னும், மணியும், ஆடை ஆபரணங்களையும் அள்ளி அள்ளி வழங்கினார்.  தானம்செய்ய அந்தணர் கைகளில் இடப்பட்ட நீர் பெருகி இன்னொரு வைகையோ என்னும்படி ஓடியது.  பிரம்மா, விஷ்ணு, இந்திரன், தேவர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள், அப்சரஸ்த்ரீகள், முனிவர்கள் அனைவரும் வந்து குழந்தையைக் கொண்டாடினர். 

    முருகனின் பிள்ளை அழகைப் பற்றி எழுதவும் கூடுமோ?

  ஆறாம் மாதம் அன்னப் பிராசனம் ஐந்தாம் வயதில் உபநயனம் என்று இப்படி எதுவும் குறைவின்றி உக்கிரன் வளர்ந்தான்.  எட்டு வயதிற்குள் வில்வித்தை, குதிரையேற்றம், அஸ்திர வித்தைகள், மறைகள், கலைகள் உட்பட அனைத்தும் கற்றுத்தேர்ந்தான். அக்காலத்தில் க்ஷத்திரியருக்கு உப நயனம் உண்டு.

  நாளொரு மேனியும் பொழுதொரு - வண்ணமுமாக வளர்ந்த தன் செல்வன் காளைப் பருவமெய்தி அழகுடன் ஜொலிப்பது கண்டு விரைவில் அவனுக்கு விவாகம் செய்வித்து ராஜ்யபாரத்தை ஒப்படைக்கத் தீர்மானித்தார் சுந்தரப் பாண்டியர்.



      இதே சமயம் சிவபெருமான் மணவூர் அரசரான சோம சேகரர் என்பவர் கனவில் தோன்றி அவரது தவப்புதல்வியான காந்தி மதியை உக்கிரனுக்கு மணமுடிக்கக் கட்டளையிட்டார்.

   முருகப் பெருமான் உக்கிர பாண்டியனாகப் பிறந்த இந்தப் 11-ஆம் திருவிளையாடல் சத்புத்ர பாக்கியத்தையும், மற்றும் எல்லாச் செல்வங்களையும் கொடுக்கும்.  பாலாரிஷ்டம் நீங்கும்.  குறை கர்ப்பம் போன்ற தொல்லைகள் நீங்கும்.




    இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


   ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



giri facebook
 giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை