திருவிளையாடல் புராணம் - கடலை வற்றடித்தல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
கடலை வற்றடித்தல்
சிறுவனாயிருக்கையிலேயே பெருமான் தன் மீது கருணை கொண்டு முடி செய்ய இரத்தினம் கொடுத்தார் என அமைச்சர் கூறக் கேட்டிருந்த அபிஷேக பாண்டியன் ஆலவாய் பெருமானிடத் தில் அளவற்ற பக்தி கொண்டான். அவன் செய்த பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டாதது. தினந்தோறும் பால், பஞ்சாமிருதம், சந்தனம், புத்தம் புதிய முழு மலர்கள், இரத்தின நீர், கருப்பஞ்சாறு இவற்றால் முறைப்படி அபிஷேகம் செய்வித்து, பனிநீர் கலந்த கர்ப்பூரக் குழம்பைப் பூசி, நைவேத்தியமாக பால், தயிர், தேன், பாயசம், வடை, பழங்கள் முடிவில் வாசனைப் பொருள்கள் சேர்த்த தாம்பூலம் முதலியன கொடுத்து வெகு அற்புதமான பூஜிப்பான்! இவனது கர்ப்பூரக் குழம்பு அலங்காரத்தினால் இறைவனுக்கு கர்ப்பூர சுந்தரம் என்ற பெயரே வந்துவிட்டது.
சித்திரா பௌர்ணமி இரவில் பூஜிக்க வந்த இந்திரன் அரசன் நடத்திய வழிபாட்டைக் கண்டு வியந்து மயங்கி நின்றான். அரசன் பூஜை முடித்து சென்றபிறகு தன் பூஜையை நடத்திவிட்டு ஸ்வர்க்கம் போனான்.
இந்திரனுக்குத் தான் பொறாமை உடன்பிறப்பாயிற்றே! வெந்து புழுங்கும் சமயம் அரசவைக்கு வருணன் வந்தான். இந்திரனின் முகவாட்டத்திற்குக் காரணம் கேட்டான்.
அதுகிடக்கட்டும்; நீ என்னைக் காணவந்த விஷயத்தைக் கூறு" என இந்திரன் வினவ, தனது தீராத வயிற்று வலி தீர வழியொன்று காண்பிக்குமாறு வேண்டினான்.
மதுரை சென்று பொற்றாமரையில் நீராடி அந்தரங்க சுத்தியுடன் சுந்தரேசரை வழிபட்டால் தீராத நோயும் தீர்ந்துவிடும். ஆனால், நான் அந்த பெருமானுக்கு விமானம் கட்டினேன்.
பொன்னாலான தாமரை மலர்களைப் பூசித்தேன்; ஆயினும் ஆலவாயை ஆளும் அபிஷேக பாண்டியனின் பெருமை எனக்கு இல்லையே" எனப் பெருமூச்சு விட்டான். பின்னர் வருணா, அந்த மூர்த்தியின் பெருமையையும், மன்னனின் சிறப்பையும் நீ சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை" என வருணனைத் தூண்டி விட்டான். வருணன் மகிழ்ச்சியோடு சம்மதித்தான்.
பொன்னாலான தாமரை மலர்களைப் பூசித்தேன்; ஆயினும் ஆலவாயை ஆளும் அபிஷேக பாண்டியனின் பெருமை எனக்கு இல்லையே" எனப் பெருமூச்சு விட்டான். பின்னர் வருணா, அந்த மூர்த்தியின் பெருமையையும், மன்னனின் சிறப்பையும் நீ சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை" என வருணனைத் தூண்டி விட்டான். வருணன் மகிழ்ச்சியோடு சம்மதித்தான்.
சமுத்திரத்தை அழைத்து மதுரையை விழுங்கி விடு" என உத்தரவிட்டான். முன்னம் ஒரு முறை உக்கிர பாண்டியன் கொடுத்த அடிமறந்து போனதே போல, சமுத்திரராஜன் மலைபோன்ற அலைகளுடன் பேரிரைச்சல் போட்டுக் கொண்டு மதுரையைச் சூழ்ந்து கொண்டான். மக்கள் தவித்தனர். மன்னனும் குடிகளுடன் கோவிலில் வந்து வேண்டி நின்றான்.
ஆலவாய் பெருமான் உடனே தோன்றி, அஞ்சவேண்டா" என அபயம் அளித்து தன் சடா முடியினின்று நான்கு மேகங்களை உண்டாக்கி கடல் நீரனைத்தையும் உறிஞ்சும்படி கட்டளையிட்டார். அவ்வாறே உறிஞ்சப்பட்டதும் நகரம் முன் போலாகிவிட்டது. மன்னனும், குடிபடைகளும் பெருமானை போற்றி வணங்கினர். இந்த 18-ஆம் திருவிளையாடலை பக்தியுடன் படிப்பவரும், கேட்பவரும் பெரும் பாவத்திலிருந்து விடுபடுவர். எப்பேற்பட்ட நோயும் நீங்கி உடல் வலிமைபெறும். மழை பெய்து நாடு சுபீட்சமாய் இருக்கும் என்பது நிச்சயம்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



கருத்துகள் இல்லை