சிவ புராணம் - ருத்ராட்ச முகங்களும், அதன் பயன்களும்
சிவ புராணம்
ருத்ராட்ச முகங்களும், அதன் பயன்களும்
எத்தனை முக ருத்ராட்சங்கள் இருக்கின்றன என்று இதுவரை முழுமையான தகவலில்லை. என்றாலும், 21 முகங்கள் உள்ள ருத்ராட்சங்கள் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
ஒரு முக ருத்ராட்சம்:
இது சிவனின் அம்சம் என அறியப்படுகிறது. இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். மோட்சம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.
இரு முக ருத்ராட்சம்:
சந்திரனின் அம்சமான இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் குடும்ப உறவு மேம்படுமாம். மூன்று முக ருத்ராட்சம் அக்னியின் ஆதிக்கம் பெற்ற இந்த ருத்ராட்சத்தை அணிவதால், இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்களும் குணமாகும் என கூறப்படுகிறது.
நான்கு முக ருத்ராட்சம்:
நான்முகனின் ஆசி பெற்ற இந்த ருத்ராட்சத்தை அணிவதால் மனம் சாந்தியும், வாழ்வு நிலையும் உயர்வடையுமாம்.
ஐந்து முக ருத்ராட்சம்:
ருத்ரனின் அம்சமான இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் விபத்துக்களால் மரணமோ, அகால மரணமோ ஏற்படாது என நம்பப்படுகிறது.
ஆறு முக ருத்ராட்சம்:
கார்த்திகேயனின் அருள் பெற்ற இந்த ருத்ராட்சத்தை அணிவதால், மன ஆரோக்கியமும், பேச்சாற்றலும் கிடைக்கப் பெறுமாம்.
ஏழு முக ருத்ராட்சம்:
ஈசன், சூரியன், சப்த மாதர்கள், ஆதிசேஷன், மன்மதன், முருகன் ஆகியோரின் ஆசி பெற்ற இந்த ருத்ராட்சத்தை அணிவதால், விஷ ஜந்துகள் அண்டாது, எதிரிகள் அழிவர் என்கின்றன புராணங்கள்.
எட்டு முக ருத்ராட்சம்:
கணபதியின் ஆசி பெற்ற இந்த ருத்ராட்சம் வாழ்வில் எதிர்பட்ட தடைகளை நீக்கி புகழடையச் செய்யுமாம்.
ஒன்பது முக ருத்ராட்சம்:
துர்க்கா தேவியின் ஆதிக்கம் நிறைந்த இந்த ருத்ராட்சம் பயமின்றி வாழ வழிவகுக்குமாம்.
பத்து முக ருத்ராட்சம்:
சேஷசயனனின் ஆசி பெற்ற இந்த ருத்ராட்சத்தை வழிபடுவதால் பில்லி சூனியம் போன்ற துர்பலன்களிலிருந்து விடுபடுவது நிச்சயம் என்கின்றன புராணங்கள்.
பதினொரு முக ருத்ராட்சம்:
வாயு புத்திரனின் அருள் பெற்ற இந்த ருத்ராட்சத்தை அணிவதால் நீண்ட ஆயுளும், செய்யும் முயற்சிகளால் வெற்றியும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
பன்னிரண்டு முக ருத்ராட்சம்:
மகாவிஷ்ணுவின் ஆளுமை நிறைந்த இந்த ருத்ராட்சம், வியாதிகளைப் பற்றிய பயத்தை நீக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்குமாம்.
பதிமூன்று முக ருத்ராட்சம்:
தேவேந்திரன், மகாலட்சுமி, முருகன் மற்றும் மன்மதனின் ஆசி பெற்ற இந்த ருத்ராட்சம் சொர்க்க வாழ்வை அளிக்கவல்லதாம்.
பதினான்கு முகங்கள்:
ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியதால் தனிச் சிறப்பு வாய்ந்த இந்த ருத்ராட்சத்தை அணிபவர்கள், தர்மத்தை நிலைநாட்டும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
பதினைந்து முகங்கள்:
சிவனின் அம்சமான இந்த ருத்ராட்சம் இகபர சுகங்களை தரும் என நம்பப்படுகிறது.
பதினாறு முகங்கள்:
ஸ்ரீ மகாகாளேசுவரரின் ஆசி பெற்ற இந்த ருத்ராட்சத்தை அணிந்தாலே வெற்றிதான் என்கின்றன புராணங்கள்.
பதினேழு முகங்கள்:
விஸ்வகர்மாவின் அம்சமாகக் கருதப்படும் இந்த ருத்ராட்சத்தை பூஜிப்பவர், மிகப்பெரும் செல்வந்தராவாராம்.
பதினெட்டு முகங்கள்:
பூமி மாதாவின் அம்சம் எனப் போற்றப்படும் இந்த ருத்ராட்சம், நோயற்ற வாழ்வை அளிக்கும் என நம்பப்படுகிறது.
பத்தொன்பது முக ருத்ராட்சம்:
ஸ்ரீ மகா விஷ்ணுவின் ஆதிக்கம் பெற்ற இந்த ருத்ராட்சம் செல்லும் இடங்களிலெல்லாம் வெற்றியைத் தரும் என்கிறார்கள் சான்றோர்கள்.
இருபது முக ருத்ராட்சம்:
நான்முகனின் அம்சமான இந்த ருத்ராட்சம் சகலவிதமான நற்பலன்களையும் அளிக்கவல்லதாம்.
இருபத்தியொரு முக ருத்ராட்சம்:
குபேரனின் அம்சமான இந்த ருத்ராட்சத்தை தரிப்பவர்களை பில்லி சூன்யம் போன்ற துர்பலன்கள் அண்டவே அண்டாதாம்.
இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


கருத்துகள் இல்லை