சிவ புராணம் - ஈசனின் ஐவகைத் தோற்றம்
சிவ புராணம்
ஈசனின் ஐவகைத் தோற்றம்
1. சத்தியோசாதம் : சுவாத லோகித கற்பத்தில், பிரம்மனுக்கு அழகிய இளம் பாலகனாய் காட்சியளித்தார். இது ’சத்தியோசாதம் எனும் தோற்றம்.
2. வாமதேவம் : இரத்த கற்பத்தில், சடையில் பாம்பணிந்து, கரங்களில் மானும், மழுவும் ஏந்தி, பிரம்மனுக்கு ஈசன் காட்சியளித்த தோற்றம் ’வாமதேவம்
3. தத்புருஷம் : பீத கற்பத்தில், சடையில் இளம் மதியை அணிந்து கொண்டு, நான்முகனுக்கு காட்சி கொடுத்த தோற்றம் ’தத்புருஷம்
4. அகோரரூபம் : நீல கற்பத்தில், நெருப்பும், வாளும் கையிலேந்தி கரிய ரூபத்துடன் ஈசன் தோற்றமளித்ததே ’அகோர ரூபம்
5. ஈசானம் : விஸ்வரூப கற்பத்தில், சடையில் பிறைச் சந்திரன், நெற்றிக் கண், கோரைப் பற்கள் கொண்டு இருபுறமும் இரு மாதர்களோடு தோன்றினார்.
70. பஞ்சபூத ஸ்தலங்கள்
1. காஞ்சிபுரம் பிருத்வி ஏகாம்பரேஸ்வரர்
2. திருவானைக்கா நீர் ஜம்புகேஸ்வரர்
3. திருவண்ணாமலை அக்னி அருணாச்சலேஸ்வரர்
4. திரு காளஹத்தி வாயு காளத்தீஸ்வரர்
5. சிதம்பரம் ஆகாயம் நடராஜர்
71. நடன ஸ்தலங்கள்
சிதம்பரம் கனக சபை
மதுரை ரஜத சபை
திருநெல்வேலி தாமிர சபை
திருவாலங்காடு ரத்தின சபை
திருக்குற்றாலம் சித்திர சபை
இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


கருத்துகள் இல்லை