குரு பூர்ணிமா - குரு பாதுகா ஸ்தோத்ரம்
குரு பாதுகா ஸ்தோத்ரம்
அனன்தஸம்ஸார ஸமுத்ரதார னௌகாயிதாப்யாம் குருபக்திதாப்யாம்
வைராக்ய ஸாம்ராஜ்யத பூஜனாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.
கவித்வவாராஷி நிஷாகராப்யாம் தௌர்பாக்யதாவாம் புதமாலிகாப்யாம்
தூரிக்றுதானம்ர விபத்ததிப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.
நதா யயோ ஸ்ரீ பதிதாம் ஸமீயு: கதாசிதப்யாஷ்ர தரித்ரவர்யா:
மூகார்ஷ வாசஸ்பதிதாம் ஹி தாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.
நாலீகனீகாஷ பதாஹ்றுதாப்யாம் நானாவிமோ ஹாதி நிவாரிகாப்யாம்
நமஜ்ஜ நாபீஷ்ட ததிப்ரதாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.
ந்றுபாலி மௌலி வ்ரஜரத்னகான்தி ஸரித்விராஜத் ஜஷகன்ய காப்யாம்
ந்றுபத்வ தாப்யாம் னதலோக பங்கதே: நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.
பாபான்தகாரார்க பரம்பராப்யாம் தாபத்ரயா ஹீன்த்ர கஹேஷ்ர் வராப்யாம்
ஜாட்யாப்தி ஸம்ஷோஷண வாடவாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.
ஸமாதிஷட்க ப்ரதவைபவாப்யாம் ஸமாதிதான வ்ரததீக்ஷிதாப்யாம்
ரமாத வான்த்ரிஸ்திர பக்திதாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.
ஸ்வார்சா பராணாம் அகிலேஷ்ட தாப்யாம் ஸ்வாஹாஸ ஹாயாக்ஷ துரன்தராப்யாம்
ஸ்வான்தாச்ச பாவப்ரதபூஜனாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.
காமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம் விவேகவைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்றுதமோக்ஷ தாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.
விளக்கம்:
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் முடிவில்லா மறு பிறப்பில் இருந்து விடுதலை தரும் தோணி இது குருநாதருக்கு தூய பக்தியை செலுத்தும் மனநிலையை தரவல்லது இதை வணங்குவதின் மூலம் பட்டற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் முழு பௌர்ணமி நிலா போன்றதும் அறிவுக் கடலுமாகும் இந்த பாதுகை நெருப்பு போன்ற துயரங்களையும் அழிக்கும் கருணை நீர் இது சரணாகதி அடைந்தவர்களின் துன்பங்கள் அனைத்தையும் அழிக்க வல்லது.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் தன்னை வணங்கித் துதிபவர்கள் ஏழைகள் என்றாலும் அவர்களையும் செல்வந்தர்களாக்கும் சக்தி கொண்டது ஊமைகளைகூட சக்தி மிக்க பேச்சாளராக்கும் வல்லமை கொண்டது.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் தாமரை மலர் போன்ற குருவின் பாதங்களை அலங்கரிக்கும் இது வீண் ஆசைகளை அழித்து மனதை தூய்மை படுத்தும் தூய்மையாகத் துதிபவர்கள் எண்ணங்களை நிறைவேற்றும்.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் மன்னனின் கிரீடத்தில் ஜொலிக்கும் மாணிக்கக்கல் இது முதலைகள் சூழ்ந்த நதியில் ஜொலிக்கும் இளம் பெண் போன்றது தன் பக்தனை மன்னனாகவே மாற்றும் சக்தி கொண்டது.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் கொடிய பாபங்களை ஒழிக்க வந்த ஆயிரம் சூரியன் போன்ற சக்தி கொண்டது நச்சுப் பாம்புகளைப் போன்ற துயரங்களை அழிக்க வந்த ராஜா கருடனைப் போன்றது கடல் போன்ற அறியாமையை பொசுக்க வந்த தீயைப் போன்றது.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் அளவற்ற ஆரறிவை அனைவருக்கும் தரவல்லது மாணவனைப் போன்று வந்தவர்க்கும் பேரானந்த நிலையைத் தருவது விஷ்ணுவின் பாதத்தை நிலையாக வணங்கும் சக்தி தரவல்லது.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் என்றென்றும் தம் பணியை செய்து கொண்டிருக்கும் தம் சிஷ்யர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆத்மா ஞானம் பெற்றிட வழி வகுக்கும் வல்லமை படைத்தது.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் மோகம் என்ற பாம்பினை அழிக்கவல்ல கருடனைப் போன்றது பட்டற்ற மனநிலை, அளவற்ற அறிவு அனைத்தையும் தருவது ஆத்மா ஞானத்தைப் பெற மனதார ஆசி தரும் தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு விரைவாகவே முக்தி தரும்.


கருத்துகள் இல்லை