Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - சக்தியை சரணடைவோம்

மஹா மாரியம்மன் 
ஆடி மாத சிறப்புகள் 


சக்தியை சரணடைவோம் 


தெய்வ வழிபாட்டில் சக்தி வழிபாடு மிகவும் பழமையானது. ஆதியிலிருந்தே இந்திய சாஸ்திரங்கள் பெண்ணுக்கே முதலிடம் கொடுத்து வந்துள்ளன. சிந்து நதி மற்றும் மொகஞ்சதாரோ, ஹரப் பாவில் தோன்றி வளர்ந்த நாகரீகங்களும் பெண்களுக்கு முதலிடம் கொடுத்துள்ளதை அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. 

ஆதியில் மனிதன் இயற்கையாகத் தோன்றும் இடி, மின்னல், சூறாவளிக்காற்று, பாய்ந்தோடும் நதி, எல்லாவற்றையும் பஸ்பமாக்கும் தீ, பரந்து விரிந்த பூமி ஆகியவற்றை பஞ்ச பூதங்களாக வழிபட்டான். நாளடைவில் இவற்றையெல்லாம் நடத்திவருவது ஏதோவொரு சக்தி என்று எண்ணி, அந்த சக்தியை பெண்  தெய்வமாக உருவகித்து வணங்கத் தலைப்பட்டான். 

வேதங்களில் பழமையான ருக்வேதம் அதிதி என்ற பெண் தேவதைதான் எல்லாவற்றிற்கும் காரணமென்றும், தேவர்களின் உறைவிடமாக விளங்கும் அவளே தங்கள் கஶ்டங்களைப் போக்கட்டும் என்றும் அவளே தங்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் அருள வேண்டுமெனவும் கூறுகிறது. 

மேலும் யஜுர் வேதத்திலும், சாம வேதத்திலும் அதிதி போன்ற பெண் தேவதைகளைப் போற்றி துதிக்கும் வர்ணனைகள் உள்ளன. 

ஸ்ரீ தேவ்யதர்வசீர்ஶம் என்ற நூலில், ்ப்ரஹ்ம ஸ்வரூபமான என்னிடத்திலிருந்தே இந்த ப்ரபஞ்சம் உற்பத்தியானது. என் சக்தியால் இயங்கும் ப்ரபஞ்சத்தில் வித்யை, அவித்யை, இருள், ஒளி, இன்ப துன்பம் எல்லாமாக நானே இருக்கிறேன் எல்லா தேவதைகளும் என்னுடைய அம்சமாகவே உள்ளனர்சு என்று கூறுகிறாள் தேவி. 

மேலும் ததி, சசி, பௌலோமி, உஶா, அக்னாயி, வருணானி, பாரதி, அரண்யினி, இளா, சரஸ்வதி, மஹி, ஸரமா, தக்ஷிணா போன்ற பெண் தேவதைகளும் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தவிர பூமியை தேவியென்றும், உணவை அன்னபூரணி என்றும் பெண் பெயராலேயே அழைக்கிறோம். ஓடும் நதிகளையும் பெண் சக்தியாகவே கொண்டாடுகின்றோம். 

சங்கநூல்களில் பல இடங்களில் கொற்றவை வழிபாடு குறிக்கப் பட்டுள்ளது. கொற்றவை தவிர மேலும் பல பெண் தெய்வங்களின் வழிபாடும் இடம் பெற்றுள்ளது. 

தமிழகத்தில் மட்டுமல்லாது, பாரத தேசம் முழுவதும் பல முனிவர்களும் சித்தர்களும் அவ்வப்போது தோன்றி வந்துள்ளனர். அவர்கள் சக்தி வழிபாட்டை பெரும்பாலும் கைக்கொண்டவர்களாக விளங்கினார்கள். பிற தெய்வங்களை வழிபட்டாலும், சக்தியையும் சேர்த்து வழிபடும் வழக்கம் அவர்களிடம் இருந்தது. 

இந்து மதத்திலிருந்து தோன்றிய புத்தமதம், ஜைன மதம் ஆகியவையும் பெண் தெய்வங்களைப் போற்றுகின்றன. புத்தமதத்தில் வஜ்ராயனப் பிரிவினர் பல பெண் தெய்வங்களை உபாசிக்கின்றனர். ஜைன மதத்தவர்கள் 24 தேவிகளைப் பூஜிப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்து மதத்தைப் பொறுத்தவரையில் காளி உபாசனை, பரந்து விரிந்த பாரத தேசம் முழுவதும் பரவியுள்ளது. அவளே வெவ்வேறு உருவங்களில், பெயர்களில் பல இடங்களில் வழிபடப்படுகிறாள். 

பல ஊர்களில் காவல் தெய்வமாகவும் விளங்குகிறாள். 

இந்தியா முழுவதிலும் தேவி வழிபாடு பிரபலமானது. அன்னைக்குத்தான் எத்தனை நாமங்கள் ! 

சிவனின் சக்தியான சிவை! நாராயணனின் சக்தியான நாராயணி! ப்ரும்மாவின் சக்தியான ப்ராஹ்மணி! எங்கும் எதிலும் வ்யாபித்திருப் பதால் சத்யை! எல்லா மங்களங்களையும் தருவதால் சர்வமங்களா! விஷ்ணு ரூபமான வைஶ்ணவி! நிர்மல ரூபமான கௌரி! ஹிமவானின் புத்ரியான ஹேமாவதி! சண்டமுண்டர்களை அழித்ததால் சாமுண்டி! மகிஶனை அழித்த மகிஶாசுரமர்த்தினி! குமரனின் அம்சமான கௌமாரி! மகேசனின் சக்தியான மாகேஸ்வரி! 

இன்னும் எத்தனை எத்தனையோ! அம்பிகை, ஆர்யை, கௌரி, தேவி, சாம்பவி, ருத்ராணி, மலைமகள், கன்னி, குமரி, வேத முதல்வி, முக்கண்ணி, அபிராமி, மனோன்மணி, உமை, பவானி..... பெயர்கள் பல. காஶ்மீரில் வைஶ்ணவி, கன்னியாகுமரியில் ்கன்யாபகவதிசு, ராஜபுதனத்தில் பவானி, கூர்ஜரத்தில் கல்யாணி, வங்காளத்தில் காளி, அஸ்ஸாமில் காமாக்யா, மைசூரில் சாமுண்டி, காசியில் விசாலாட்சி, மதுரையில் மீனாட்சி, காஞ்சியில் காமாக்ஷி, மலையாளத்தில் பகவதி, குஜராத்தில் அம்பா என பல பெயர்களில் தேவி வழிபாடு பாரதம் முழுவதும் பரவியுள்ளது. எவருக்கு எந்த பெயர் பிடித்ததோ, அவரவர் அந்தந்த பெயர்களில் வணங்குகின்றனர். 

அவள் பூரணமானவள். அதனால் பூரணியாகிறாள். எல்லோருக் கும் அன்னமிடுவதால் அன்னபூரணி. அவளே படைக்கும் போது ப்ராம்மணி, காக்கும்போது வைஶ்ணவி, அழிக்கும் போது ருத்ராணி, துன்பங்களை நீக்கும்போது துர்கையும், செல்வச் செழிப்புடன் வாழவைக்கும்போது லக்ஷ்மி அறிவுச் செல்வத்தையும் சகல கலை களையும் அருளும்போது கலைவாணியும் அவளே. காலத்தின் ஸ்வரூபமாக இருப்பதால் ிகாளிீ எனப்படுகிறாள். அவளுடைய திருவடித் தாமரைகளின் பெருமைக்கு எல்லையே இல்லை. அந்த திருவடித்  தாமரைகளை சரணடைந்தவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. அவளுடைய திருநாமத்தைச் சிந்திப்போர்க்கு இனி பிறவி இல்லை. அம்மா என்றழைத்தால் ஓடோடிவந்து அணைத்து அருள் மழை பொழியும் தெய்வம் அவளன்றி வேறு யாரும் இல்லை.  

அந்த தாயன்பு பெருக நாம் என்ன செய்ய வேண்டும்? எல்லா உயிரினங்களையும் மதிக்க வேண்டும். எல்லாவற்றிலும் இறைவன் உறைவதாக எண்ண வேண்டும். பற்றற்ற உள்ளத்துடன் தேவியிடம் சரணடைய வேண்டும். தாயாக அவளை நேசித்தால் சேயாக நம்மை அவள் காப்பாள். 

பகலில் என் வீடு, என் சுற்றம், என் செல்வம் என்றெல்லாம் எண்ணும் நாம் இரவில் உறங்கச் செல்கிறோம். அப்பொழுது 'என்' என்ற எண்ணம் நம்மைவிட்டு நீங்கிவிடுகிறது. அப்பொழுது நடப்பது எதுவும் நமக்குத் தெரியாது. பல சமயங்களில் கனவினில் புதிய உலகத்திற்கே சென்றுவிடுகிறோம். அப்பொழுது நடப்பவைகளே உண்மையென்று கனவினில் நம்பிவிடுகிறோம். ஆனால் விடிந்தால்...? 

கனவு கலைந்துவிடுகிறது. மாயத் தோற்றங்கள் எல்லாம் மறைந்து விடுகின்றன. பழைய நினைவுகள் திரும்புகின்றன. மீண்டும் ிநான்ீ, ிஎனதுீ என்ற எண்ணங்கள் நம்மை ஆக்ரமிக்கின்றன. அவற்றை காப்பாற்ற துடியாய் துடிக்கிறோம். இரவில் நாம் தூங்கிய போது இவைகளை யார் காப்பாற்றினர்? 

வறுமையில் வாடும் போதும், துன்பத்தில் துவளும் போதும் இறைவனை நாடுகிறோம். சற்று சுகமாக இருந்துவிட்டால் சௌகர்ய மாக அவளை மறந்து விடுகிறோம். எல்லாம் என்னால் நடந்தது என்ற எண்ணமே அப்பொழுது மேலோங்குகிறது.  

உண்மையான வழிபாடும் நம் முன் வினைகள் முன்னிற்க சில வேளைகளில் பலன் தராமல் போகலாம். ஆனால் அந்த வழிபாட்டிற் குரிய பலன் என்றோ ஒரு நாள்  நிச்சயம் கிடைக்கும். அது வரையில் இறை நம்பிக்கையைக் கைவிட்டுவிடாமல் தொடர வேண்டும். வாழ்வில் சோதனைகள் இயற்கை. அந்த சோதனைகளைத் தாங்கி நிற்கவே இறைவனின் துணை நமக்குத் தேவை. மனவுறுதியும், வைராக்யமும் என்றும் நம்மைக் காப்பாற்றும். 

தன் பக்தன் வாடுவதைக் கண்டு அன்னை பொறுக்க மாட்டாள். இதற்கு எத்தனையோ சம்பவங்கள். இதோ... அதில் ஒன்று: 

நடராஜப் பெருமானின் பக்தராக விளங்கிய இராமலிங்க அடிகள் சிறு வயது முதல் திருவொற்றியூர் தியாகராஜப் பெருமானையும் வடிவுடை நாயகியையும் தினந்தோறும் வணங்கி வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒரு நாள் திருவொற்றியூர் சென்று வீடுதிரும்ப நேரமாகிவிட்டதால் ஒரு வீட்டின் திண்ணையில் பசியுடன் படுத்துறங்கி விட்டார். பசியுடன் அவர் படுத்திருப்பதைப் பொறுக்காத தேவி அவருடைய அண்ணியார் வடிவில் சென்று அவருக்கு திருவ முதூட்டினார். அதை வள்ளலாரே சொல்கிறார் ்தெற்றியிலே நான் பசித்து படுத்திருந்த தருணம்சு என்ற பாடலில். 

அன்னையை துதிக்கும்போது அனுஶ்டானங்களை அனுசரிக்கும் அதே வேளையில் நம் எதிரில் அன்னை உண்மையாகவே எழுந்தருளி யிருப்பதாக எண்ணிக்கொள்ள வேண்டும். அதற்கேற்றால் போல் பூஜையைத் தொடர வேண்டும். ஒவ்வொரு நாமாவளியைச் சொல்லும் போதும் அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் விளக்கமாய் எழுந்தருளியிருக்கும் தேவியின் திருப்பாதங்களில் ஒவ்வொரு மலராக எடுத்துச் சாற்ற வேண்டும். காதல் மிகுந்து கண்ணீர் மல்க இறைவியை நேசிக்கும் பக்தர்களாக நாம் மாற வேண்டும். 

அந்த அன்பில் கட்டுப்பட்டவளான  அன்னையின் அருள் பெருகும். அந்த அன்னையின் அருள் கிடைத்து விட்டால் பிறகு வேறென்ன வேண்டும்? 

அந்த அன்னையை நாமும் சரணடைவோம். அவள் அருள் பெற்றிடுவோம். 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை