Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - படவேடு ரேணுகாம்பாள்

மஹா மாரியம்மன் 
ஆடி மாத சிறப்புகள்

படவேடு ரேணுகாம்பாள்





வேலூருக்கருகிலுள்ள காட்பாடி, வேலூர் பாதையில் சந்தவாசல் அருகில் உள்ள கோயில் குடிகொண்டிருக்கும் படவேடு ரேணுகாம்பாள். மிகவும் சக்தி வாய்ந்தவள். சிரஸு மட்டும் வைத்து வழிபடுகிறார்கள். 

ரமணாஸ்மரத்தில் இருந்த காவ்யகண்ட கணபதி சாஸ்திரிகள் ரேணுகா தேவி மீது மிக பக்தி கொண்டவர். ரேணுகா தேவி அவருக்கு பிரத்யட்சம். இந்த ஆலயத்தருகில் கமண்டல நதி ஓடுகிறது. இங்கு சபரிமலை ஐயப்பன் யானை மீது காட்சி தருகிறார். புராணங்களில் ராவணனை வெற்றி கொள்ள அனுமன் இவ்வன்னையை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. 

ஞானியர் பலர் தவமிருந்து சித்தி பெற்ற தலம். ஆதிசங்கரர் பாணலிங்கமும், தனாகர்ஶண சக்கரமும் பிரதிஶ்டை செய்துள்ளார். உலகில் சக்தியே எல்லாம் என எடுத்துரைக்கும் வண்ணம் இங்கு சுயம்புவாய் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். பிரம்மா, விஶ்ணு, சிவன், மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு அருள்கிறாள். 

பொதுவாக அம்பாள் கோயில் என்றால் குங்குமம் பிரசாதம் தரப்படும். ஆனால் இக்கோயிலில் வித்தியாசமாக விபூதி பிரசாதம் தரப்படுகிறது. மிகவும் உன்னதமானது. ஜமதக்னி முனிவர் ஆசிரமத் தில் அவர் யாகம் செய்த இடத்திலிருந்து இது வெட்டி எடுக்கப் படுகிறது. இத்திருச் சாம்பல், ஆனித் திருமஞ்சனம் அன்று கமண்டல நதிக்கரையிலிருந்து பூத்திருக்கும் திருநீரை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தரப்படுகிறது. 

பிணி, பில்லி, சூனியம் வயிற்றுவலி போன்ற நோய்களிலிருந்து விடுபட இத்திருச் சாம்பலை நீரில் கலந்து  பருக, குணமடைகி ன்றனர்,  குழந்தை பாக்கியம் அற்றவர்களுக்கு மழலைச் செல்வமும் சித்திக்கிறது. கோடி தீபம் ஏற்றுதல் இத்திருத்தலத்தில் மிகவும் சிறப்புடைய தாகக் கருதப்படுகிறது. எந்த நோயானாலும் இத்திருக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குணமாகிறது. அம்மை நோய் கண்டவர்கள் விரதமிருந்து 3 அல்லது 5 நாட்கள் இங்கு தங்கி திருநீறுபூசி தீர்த்தத்தை தெளிக்க குணமடைவது நிச்சயம். அம்பிகை சோதிப்பாள். ஆனால் கைவிட மாட்டாள். திருமண வரம், குழந்தை வரம் அளிப்பதில் அவளுக்கு நிகர் எவரேனும் உளரோ! 

பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பின் எடைக்கு எடை நாணயம் செலுத்தி, நெய் தீபமேற்றி, நேர்த்திக்கடனை பூர்த்தி செய்கின்றனர். சிலை, கண்மலர் சார்த்துதல், உருவங்கள், மற்றும் புடவை, ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். 

வேப்பிலை ஆடை உடுத்தி கோயிலை வலம் வருதல், அங்க பிரதட்சணம் செய்தல், மொட்டையடித்தல், காது குத்தல், தொட்டில் கட்டுதல், ஆடு, மாடு, கோழி காணிக்கை செலுத்துதல் ஆகியவை இத்தலத்தில் முக்கியமான நேர்த்திக்கடனாக பக்தர்கள் செய்கிறார்கள். வெல்லம், மிளகு செலுத்த முகப்பரு மற்றும் மருக்கள் மறைகின்றன. குழந்தை வரம் பெற பரசுராமருக்கு தொட்டில் கட்டுகின்றனர். எந்த கோயிலாக இருந்தாலும் அம்பாளை மனதார பிரார்த்தனை செய்ய நமக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். 

தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்தாலும் ஆடி மாதத் திருவிழாக்கள்தான் இங்கு சிறப்பம்சம். ஒவ்வொரு ஆடி வெள்ளிக் கிழமையும் ஆயிரம் ஆயிரம் பக்தர்கள் வருகிறார் கள்.ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நாதஸ்வரக் கச்சேரிகள் பக்திமயமாக்கும். ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருள் பெறுகின்றனர். 

ஸ்ரீ ரேணுகாதேவியின் மீது, ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கன்னட பங்களா ராகத்தில் ரேணுகா தேவி ஸம்ரட்சி தோஹம் அனிசம் என்ற அற்புதமான கீர்த்தனையை இயற்றியுள்ளார்.


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...




கருத்துகள் இல்லை