Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - திருமுல்லைவாயல் - அன்னை பச்சையம்மன்

மஹா மாரியம்மன் 
ஆடி மாத சிறப்புகள்

திருமுல்லைவாயல் - அன்னை பச்சையம்மன்  




அட்சய பாத்திரமாக அருள்வதில் அவளுக்கு நிகர் யார்? குழந்தைப்பேறு, வேலை பாக்கியம் என்று எத்துனை தேவைகளோடு மக்கள் வேண்டினாலும் அருள்வதில் வள்ளல் இவள். 

சென்னை திருமுல்லை வாயிலில் பச்சையம்மன் ஆலயம் உள்ளது. 


பச்சையம்மன் இடது பாதம் மடித்து வலக்காலை தொங்கவிட்டு மிளிர்கிறாள். அன்னையின் மேனியே பச்சைதான். இந்த தாயின் காலடியில் பணிந்து மனமுருகி வணங்கி கும்பிட்டால் பணிவோரின் படைப்பாற்றலை பெருக்கி காண்பிப்பாள். இங்கு அம்பாள் கையில் கிளியை ஏந்தியிருக்கிறாள். 

ஒரு தடவை சிவபெருமான் பார்வதியை பூலோகத்துக்கு சென்று தவம் இயற்ற உத்தரவிட்டார். பூலோகத்துக்கு பார்வதி தேவி புறப் பட்டு வந்த போது பூமி பச்சை பசேலென காட்சி அளித்தது. இதனால் பார்வதி தேவியும் பச்சை  நிறத்துக்கு தன்னை மாற்றிக்கொண்டாள். பூலோகத்தில் பல்வேறு தலங்களுக்கு சென்று பார்வதி தேவி தவம் இருந்தார். இறுதியில் திருமுல்லைவாயில்  தலத்தில் நிரந்தரமாக இருந்து சிவபெருமானை பூஜித்து தவம் இருந்தார். இத்தலம் மிகத் தொன்மையானது.

பல்வேறு பேரரசர்கள் அம்பிகையின் பாதம் பணிந்து நல்லாட்சி புரிந்த அற்புத பூமி. நாகர் சிலைகளும், மஞ்சளும், குங்குமமும், பச்சை மண்ணும் அந்த இடத்தின் சாந்நித்தியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பச்சையம்மனை வேண்டி பிரார்த் தனையாக தொட்டில்களை தொங்கவிட்டுள்ளார்கள் பக்தைகள். 

அம்பிகையும் அவர்கள் வீட்டில் தொட்டில் கட்ட அருளாசி புரிகின்றாள். நம் அம்மா எதையும் எதிர்பார்த்து செய்கிறாளா? இல்லவே இல்லை. உண்மையான அன்பு ஒன்றே அவள் அனுக்கிரகிப் பதற்கு போதுமே. 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை