Recent Posts

மஹா மாரியம்மன் - மன சஞ்சலம் நீக்கும் பாளையம் ஸ்ரீ மாரியம்மன்

மஹா மாரியம்மன் 
மன சஞ்சலம் நீக்கும் பாளையம் ஸ்ரீ மாரியம்மன்  




மன சஞ்சலம் எல்லோர்க்கும் பொதுவானது. சிறுவர் முதல் பெரியவர் வரை யாருக்குதான் இல்லை? அவரவர் துன்பத்திற்கு ஏற்றாற்போல சஞ்சலங்கள் வேறுபடுகின்றன. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? தேவையில்லாமல் நம்மால் இயலாத காரணத்தால் புலம்புகிறோம். புலம்புவதால் ஏதேனும் துன்பங்கள் நீங்குகிறதா சொல்லுங்கள். 

நம்மைச் சேர்ந்த, பொறுமையுடன் நம் பிரச்சனைகளைக் கேட்பவரிடம், குறை களைச் சொல்லி புலம்பலாம். ஆனால் இந்த அவசர யுகத்தில் தேவையானவற்றைப் பேசவே நேரம் போதவில்லை. மேலும் தற்கால இளைஞர் சமுதாயம் எதையேனும் காது கொடுத்து கேட்கிறதா? ( இஞுடூடூ கடணிணஞு பாட்டு தவிர)  இல்லையே. நம் குறைகளை முறையிட ஏற்ற இடம் நாம் வணங்கும் கோயில்கள்தான். ஈஸ்வரன், ஈஸ்வரியை விட்டால் நம் குறை தீர்ப்பவர் யார்? கேள்விக்குறிதான். 

அத்தியூருக்கும், பவானிக்கும் மத்தியிலுள்ள படுவாச்சி கிராமத் திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாளையம் என்னும் ஊரின் மத்தியில் கேட்பதைக் கொடுக்கும் ஸ்ரீ மாரியம்மனின் கம்பீரமான திருக்கோவில் அமைந்துள்ளது. 

இந்த மாரியம்மன்  கோயிலில் ஒரு வித்தியாசமான பிரார்த்தனை. மாசி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும் நடை பயண பிரார்த்தனை மிகப் பிரபலமானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் (ஆண், பெண் இருபாலரும்) கோயிலைச் சுற்றி இரவு முழுவதும் விடியவிடிய நடப்பார்கள்.

 இது போன்று தமிழ் நாட்டில் வேறெங்கும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உடல் நலக்குறைவு, குழந்தைப்பேறு வேண்டுதல், மனசஞ்சலம், மணவாழ்க்கையில் வேறுபாடு போன்ற காரணங்களுக்கு விடைதேடி அம்பிகையை வலம் வருகின்றனர். விடிய விடிய நடந்தால் மன சஞ்சலம் அம்பாள் அனுக்கிரஹத்தால் நீங்கிவிடுகிறது. 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை