Recent Posts

மஹா மாரியம்மன் - மதுரை மகிஶாசுரமர்த்தினி

மஹா மாரியம்மன் 

மதுரை மகிஶாசுரமர்த்தினி 






மாரியம்மன் காலடியில் மகிஶன் இருப்பதால் இவள், மதுரையின் மகிஶாசுரமர்த்தினி என போற்றப்படுகிறாள். தொன்று தொட்டு நம் மக்களிடையே தெய்வமாகவும், வெப்ப நோய் தீர்ப்பவளாகவும் இவள் விளங்குகிறாள். 

கூன்பாண்டியன்  - இவர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் மதுரையை ஆட்சி புரிந்தார். மதுரையின் கிழக்கில் மகிழ மரங்கள் சூழ்ந்த வனப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் ஆக்கிரமிப்பு செய்தனர். இவ்வினத்தினர் செய்த கொடுமை தாங்க முடியாமல் மன்னர் அவர்களை விரட்டியடித்து பாதுகாப்புக்காக வைகையில் கிடைத்த அம்பாள் சிலையை வைத்து வழிபட்டார். 

அவளே எல்லையில் கோட்டை போல இருந்து காத்து இன்றளவும் வருகிறாள். போருக்கு செல்லுமுன் வெற்றி வேண்டி மதுரையை ஆண்ட மன்னர்கள் இந்த அம்பிகையை வணங்கிச் செல்வர். இந்த அம்பாள் வலது காலை மடித்து அமர்ந்திருப்பாள். வலது கால் மடித்து உட்கார்ந்திருக்கும் அம்பிகை மிகவும் சக்தி வாய்ந்தவள். 

மதுரையின் முக்கிய கோவில்களில் விழா நடக்குமுன் இந்த அம்பிகையைத் தான் முதலில் வழிபடுவர். முதல் பூஜை இவளுக்குத்தான். 

இங்கு அம்பிகையின் அபி‌ேஶக தீர்த்தம் மூலஸ்தானத்தில் பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும். அம்மை நோயால் பாதிக்கப்பட் டவர்கள் இந்த தீர்த்தத்தை வாங்கிச் சென்று நலம் பெறுவர். தோல் வியாதி கண்டவர்கள் உப்பு, மிளகு கொடுப்பர். 

பிரார்த்தனை முடிந்து வேண்டியது நிறைவேறியபின் கூழ் ஊற்றுவார்கள். இத்திருக் கோவி லில் பங்குனியின் மகா பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இக் கோயிலின் திருக்குளத்தைத் தோண்டும்பொழுது கிடைத்த விநாயகர் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அருள்பாலிக்கும் முக்குறுணி விநாயகர்


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...



கருத்துகள் இல்லை