Recent Posts

மஹா மாரியம்மன் - வேலூர் அரும்பாக்கம் குளக்கரை வாழியம்மன்

மஹா மாரியம்மன் 

வேலூர் அரும்பாக்கம் குளக்கரை வாழியம்மன் 



விஶத்தால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றில் பால் ஊற்றி இந்த குளக் கரை வாழியம்மனை வழிபட பாதிப்புகள் நீங்குமாம். வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அரும்பாக்கம். எல்லையம்மனாகவும், ரேணுகாதேவி அம்பாளாகவும் இந்த அம்பிகை வணங்கப்படுகிறாள். குளக்கரை வாழியம்மன் பிரளயம் போன்ற பெருமழையினால் பேரழிவு ஏற்பட்டபோது தோன்றிய அம்பிகை. 

ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் இருந்த கிராமம். மக்கள் தெய்வத்தை நினைக்கவில்லை. மனிதர்களாகிய நாம் என்ன செய் கிறோம்? துன்பம் வரும் போது ஸ்வாமியை வணங்குகிறோம். கொஞ்சம் நிலைமை சமாளிக்கலாம் என்று இருக்கும்போது மெதுவாக ஸ்வாமியை நினைப்பதே குறைந்து விடுகிறது. ஏனென்றால் நம்மிடம் இருந்த அச்சம் விலகி விடுகிறது. பிறவிப்பயனே அம்பாளை வழிபடுவது என்று இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! பேய் மழை பொழிந்தது அந்த கிராமத்தில்! மக்கள் இருக்க இடமில்லாமல் அவதியுற்றனர். அப்போதுதான் ஊர் மக்களுக்கு தெய்வத்தின் நினைவு வந்தது. அப்போது வெள்ளத்தில் மிதந்து வந்தது அம்மன் சிலை. குளக்கரையில் ஒதுங்கியது. 

அந்த சிலையை தொட்டு தூக்க மக்கள் பயந்தனர். அவர்களில் சோமக்கா என்பவர் அம்பிகையைத் தொட்டு தூக்கி எடுத்து வந்தார். அவருக்கு அருள் வந்தது. இத்தனை நாளும் இங்கே இருந்த என்னை உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. அதனால்தான் நானே ஒரு பிரளயத்தை உண்டாக்கி வெளியே வந்திருக்கிறேன். பயப்படாதீர்கள். இனியாவது எனக்கு இங்கே கோவில் கட்டி கொண்டாடுங்கள். இழந்த செல்வங்கள் யாவும் வந்து சேரும்,” என்றாள். குளக்கரையில் கோவில் எழுப்பி ிிகுளக்கரை வாழியம்மன்” என்று பெயரிட்டு மக்கள் வழிபட்டனர். இழந்த செல்வங்கள் யாவும் கிடைத்தது. அம்பாள் இங்கு வந்தமர்ந்த பிறகு புற்று ஒன்று அருகில் வளர ஆரம்பித்தது. அதில் நாகம் இருப்பதாக நம்புகின்றனர். இந்த புற்றில் பால் ஊற்றி வழிபட விஶத்தால் பாதிக்கப் பட்டவர்கள் குணமடைவது நிச்சயம். 

அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். அவளது காலடியில் நாகக் கன்னியின் சிரசு. இத்திருக்கோவிலில் கருவறைக்கு வெளியே விநாயகர், முருகன், சக்தி மற்றும் சரஸ்வதி தெய்வங்கள் சிற்பங்களாகக் காட்சியளிக் கின்றனர். 

ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகைக்கு மிக விசேஶம். அம்மனுக்கு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர். அம்பாள் இந் நாட்களில் நகர் வலம் வந்து ஊரின் செழிப்பை பார்வையிடு வாளாம். தை மாதம் பொங்கல் திருநாளும் விசேஶமானது. 

காணும் பொங்கலுக்கு ஒன்பது நாட்கள் முன்னதாக மாலை போட்டு விரதமிருந்து காணும் பொங்கலன்று அலகு குத்தி பால் குடம் ஏந்தி வழிபாடு செய்கின்றனர். அன்று இரவு அம்மன் திருஉலா நடை பெறும்.பெண்கள் பொங்கலிட்டு படைப்பர். ஆடு, கோழி பலியிடுவர். 

குளக்கரை வாழியம்மனை வழிபட்டால் வேலை வாய்ப்புகள் கிட்டும். குழந்தை வரம், திருமண வரம் அருள்பவள். கடன் பாக்கி வசூலித்து தருபவள். இங்குள்ள ஒரு விசேஶ பிரார்த்தனை தெரியுமா? குளத்தில் நீராடி குளக்கரை வாழியம்மனுக்கு நெய்யால் அபி‌ேஶகம் செய்து அம்மனின் சிரசில் எலுமிச்சம்பழம் வைத்து முந்தானையை ஏந்தி நெக்குருகப் பிரார்த்தித்தால் எலுமிச்சம் பழம் தானாக உருண்டு வந்து முந்தானையில் விழுமாம். அப்பழத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று பிழிந்து சாப்பிட வேண்டும். நாம் வேண்டிக் கொண்டதை அம்பாள் நிச்சயமாக நிறைவேற்றுவாள். அம்பாள் அருள்வதால் இந்த பிரார்த் தனை செய்ய மக்கள் கூட்டம் அலைமோது கிறது. நம்பிக்கையுடன் செய்யும் எந்த செயலும் நன்மையிலேயே முடியும். 

இந்த கிராம மக்கள் மிகவும் பயபக்தியுடன் அம்பாள் ஆராதனை செய்கின்றனர். சோமக்கா-இவள் அம்பாளைத் தூக்கி எடுத்தவள் அல்லவா? இருந்தாலும் அவளுக்கு வந்த சோதனை என்ன? ஒரு சமயம் இவள் நகர்வலம் வரும்போது சோமக்கா யாருடனேயோ சண்டை போட்டு மண்ணை வாரி எறிந்துள்ளாள். 

அது அம்பிகையின் முகத்தில் பட்டுவிட கோபம் கொண்ட அம்பிகை அவளுக்குப் பாடம் கற்பிக்க எண்ணி அவளது கண்களைப் பறித்துவிட்டாள். அவள் உக்கிரம் பார்த் தீர்களா? கடைசி வரை சோமக்காவிற்கு கண்கள் தெரிந்ததா? இல்லவே இல்லை. அம்பாள் மனது குளிர்ந்தால்தான் எதுவும் நடக்கும். நாம் எப்போதுமே நல்லதே செய்யப் பழக வேண்டும். நம் சந்ததியினருக்கும் கற்பிக்க வேண்டும். இந்த சம்பவத்தினாலோ என்னவோ அந்த கிராம மக்கள் மிகவும் பய பக்தியுடன் அம்மனை வழிபடுகின்றனர். 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை