Recent Posts

மஹா மாரியம்மன் - பரமகுடி - அருள்மிகு முத்தால பரமேசுவரியம்மன் திருக்கோயில்

மஹா மாரியம்மன் 

பரமகுடி - அருள்மிகு முத்தால பரமேசுவரியம்மன் திருக்கோயில் 




இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமகுடியில் அமைந்துள்ள 500 வருடங்களுக்கும் மேற்பட்ட அற்புத ஆலயம்.  

முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாக தொடுக்க வேண்டுமென்ற விநோதமான போட்டியை அறிவித்தான். இதில் போட்டியிட்ட அறிஞர்கள் பலரும், மாலை தொடுக்க முயன்று, முடியாமல் தோற்க, வியாபாரி ஒருவரின் மகள், தான் மாலை தொடுப்பதாகக் கூற, மன்னனும் சம்மதித்தான். 

அரசவைக்குச் சென்ற அப்பெண், ஓரிடத்தில் பாசி மணிகளை வரிசையாக அடுக்கி மறுமுனையில், சர்க்கரைப் பாகு தடவிய நூலை வைக்க, சர்க்கரையின் வாசனை உணர்ந்த எறும்புகள், பாசிமணியின் துளை வழியே உள்ளே சென்று, நூலை இழுக்க, அதற்காக  காத்திருந்த அப்பெண், நூலை இழுத்து மாலையாக்கினாள். மகிழ்வுற்ற மன்னன், மதிநுட்பமான அப்பெண்ணை பாராட்டி பரிசு வழங்கியதோடு, அவளையே மணக்க விரும்பி அவளைக் கட்டாயப்படுத்த, அப்பெண், தீக்குளித்துவிட்டாள். மனிதத்தன்மையில் இருந்து தெய்வத்தன்மைக்கு உயர்ந்த அப்பெண்ணை அடக்கம் செய்த இடத்திலிருந்து மண் எடுத்து வந்து இங்கு வைத்து கோயில் கட்டி, முத்தால பரமேசுவரி என்று பெயர் சூட்டினர். 

வைகை நதியின் தென்கரையில் உள்ள இக் கோயில் கருவறையில் முத்தால பரமேசுவரியம்மன், சாந்த சொரூபமாகத் தாமரை பீடத்தில் அமர்ந்திருக்க, எதிரே சிம்ம வாகனம் உள்ளது.  

நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், டமருகம் ஆகிய ஆயுதங்கள் தரித்திருக்கிறாள். அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் பிரகாரத்தில் நாகதேவதைகளுடன் மாரியம்மன் காட்சியளிக்கிறாள். முன்மண்டபத்தில் மார்த்தாண்டியம்மன், காவல் தெய்வம் போத் திராசா, கருப்பண்ணசாமி மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன் கோயில் ஒன்றுள்ளது. பக்தர் ஒருவருக்காக மதுரையில் அருளும் சுந்தரேசுவரர், எழுந்தருளிய தலம் இது. இவரது பெயரால் ஊர் பரமக்குடி (பரமன் குடிகொண்ட ஊர்) என்றழைக்கப்படுகிறது. விஜயதசமியன்று இவர் இக்கோயிலுக்கு எழுந்தருளுவார். குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன் இருக்க இவருக்கு பூசை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.  

வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஶ பூஜை செய்யப் படுகிறது. பங்குனியில் பிரம்மோத்சவ விழாவும், மாசியில் பூச்சொ ரிதல் விழாவும், ஆடியில் முளைக்கொட்டு திருவிழாவும் நடைபெறும்.  நவராத்திரி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். 

மாசியில் நடைபெறும் பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் அம்பிகைக்கு, விதவிதமாக மலர்களை சமர்பிக்கின்றனர். அவற்றைக் கொண்டு அம்பிகையின் முகம் மட்டும் தெரியும்படியாக, சன்னதி முழுக்கப் பூக்களால் அலங்காரம் செய்கின்றனர். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது. இங்கு பங்குனி பிரம்மோத்சவத்தின்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஶப வாகனத்தில் வீதியுலா கொண்டருள்கிறாள்.  

அம்மை நோய் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக்கொள் கிறார்கள். நாகதோஶம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர் சன்னதியில் பாலபி‌ேஶகம் செய்கிறார்கள். தங்கள் பிரார்த்தனை நிறைவேறிய வுடன், விசேஶ அபி‌ேஶகங்கள் செய்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை