Recent Posts

மஹா மாரியம்மன் - மும்பை - சந்தன மாரியம்மன் கோயில்

மஹா மாரியம்மன் 

மும்பை - சந்தன மாரியம்மன் கோயில் 




மும்பை, மாஹிம் ரயில்வே நிலையம் அருகே நூற்றாண்டு காலமாய் இருந்து வருகிறது சந்தன மாரியம்மன் கோயில். மராட்டியர்கள் மட்டுமின்றி, அம்மாநிலத்தில் வேலைக்குச் சென்ற பிற மாநிலத் தவரும் அந்தக் கோயிலை வழிபட்டு வந்தனர்.  

வெள்ளையர்கள் நம் நாட்டை ஆண்டபோது, மும்பையில் நான்காவது துறைமுக வேலை துவங்கியது. அச்சமயம், ரயில்வே தண்டவாளம் அமைக்கும் இடத்தில் இருந்த சந்தன மாரியம்மன் கோயிலை இடித்துத்தள்ள உத்தரவிட்டார் ஒரு ஆங்கிலேய அதிகாரி. ஆனால் எவ்வளவு முயற்சிசெய்தும் கோயிலை இடிக்க முடியவில்லை. மேலும் அன்றிரவு அவர்கள் கனவில் அம்மன் வந்து எச்சரிக்க,  அதனால் பயந்த அவர்கள், அதிகாரியிடம் ஓடிப்போய் தாம் கண்ட கனவைச் சொன்னார்கள். ஆனால் அதிகாரியோ அவர்களை கேலி செய்து, கூடுதல் பணியாளர்களை வைத்து கோயிலை அகற்ற முயற்சித்தார். கருவறையிலிருந்து ரத்தம் பீறிட, அதிகாரி திகைத்து மயங்கி விழுந்தார்.  

ஊழியர்கள் அதிகாரியிடம் அம்மனிடம் மன்னிப்பு கேட்க கூறியதால் அவரும் அன்னையிடம் ""தாயே, உனக்கு வேறு இடம் தருகிறோம். இங்கு பொதுமக்கள் பயன் பெறும் இந்த நற்பணி தொடர அருள்புரியுங்கள்” என்று அம்மனிடம் வேண்டி கேட்டுக் கொண்டு, முதலில் புதிய இடத்தில் அம்மன் பிரதிஶ்டை செய்யப்பட்ட பிறகுதான் இந்தக் கோயிலை இடிக்க முடிந்தது. 

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் பிறந்த சந்தனகிரி சுவாமிகள், காசி யாத்திரை சென்றபோது மும்பை வந்தார். இந்த அம்மனை தரிசித்து, அம்மன் மீது கொண்ட பக்தியால் இங்கேயே தங்கி சிறு ஓலைக் குடிசையாக இருந்த இந்தக் கோயிலை பெரியதாக மாற்றினார். அம்மன் அருளால் வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கும் சொல்லிவந்தார். 

அம்மனின் இருபுறமும் கணபதியும், முருகனும் அருட் செழிப் போடு வீற்றிருக்கின்றனர். ஒருபுறம் தட்சிணாமூர்த்தியும் மறுபுறம் ஆஞ்சநேயரும் இருக்க, எதிரே சனி பகவான் உள்ளார்.  ஆயிரக்கணக் கான பக்தர்கள் மாஹிம் கடற்கரையிலிருந்து அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், கரகம் எடுத்தும் ஊர்வலமாக வருவார்கள். அகிலத்தைக் காக்கும் சந்தன மாரியம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் புரிகிறாள்.  

சுடலைமாடன், ஐயப்பன், பத்ரகாளி, ஶீரடி சாய்பாபா, இருக் கன்குடி மாரியம்மன், வெங்கடாஜலபதி ஆகியோரும் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்கள். 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...



கருத்துகள் இல்லை