Recent Posts

மஹா மாரியம்மன் - திருத்தணி - வேதனைகள் தீர்க்கும் வேப்பிலைக்காரி

மஹா மாரியம்மன் 

திருத்தணி - வேதனைகள் தீர்க்கும் வேப்பிலைக்காரி 



அடியவரின் துன்பத்தை தான் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு தித்திப்பான வாழ்க்கையை அருளும் அம்பிகையின் அருளுக்குச் சாட்சியாக நிற்கும் வேப்ப மரம் உள்ள இடம் திருத்தணி. திருப்பதி மார்க்கத்தில் திருத்தணியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் ஸ்ரீமகிஶாஸுரமர்த்தினி கோவில் அமைந்துள்ளது. இங்கு கொலுவீற் றிருக்கும் அம்பிகை நம் வேதனைகளைக் களைவாள். 

இங்குள்ள வேப்ப மரத்தின் இலைகள் கசப்பதில்லை. ஆச்சர்யம் ஆனால் உண்மை அதுதான். அம்பாள் கசப்பான நமது வேதனைகளை வாங்கிக்கொண்டு இனிப்பான வாழ்வருள்கிறாள் என்பதற்கு இத்தல வேம்பே சாட்சி. அதன் இலைகள் கசப்பதில்லை. 

இங்கு அருள் பாலிக்கும் அம்பாள் எப்படி வந்தாள்? 1962ம் ஆண்டு, அரக்கோணம், ரேணிகுண்டா இரண்டாவது இருப்புப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்பொழுது சக்திபேடு என்ற இடத்தில் பணியாள் ஒருவர் கடப்பாரையால் மண்ணில் குத்த "ணங்’ என்ற ஓசை. அதை செவிமடுத்த கணமே மயக்கமுற்றார் தொழிலாளி. அருகிலிருந்தவர்கள் ஓடோடி வந்து அந்த இடத்தில் மண்ணை அகழ்ந்து பார்க்க அஶ்டபுஜ நாயகியாய் அழகு தரிசனம் தந்தாள் அம்பிகை. அங்கேயே ஒரு சிறு குடில் அமைத்து அம்பிகையை வழிபட்டு வந்தனர். 

ஆவேசமும், கோபமுமாக மகிஶாஸுரனை அழித்து அம்பாள் மகிஶாஸுரமர்த்தினியாக ஆனால் சாந்த ஸ்வரூபிணியாக காட்சி அளிக்கிறாள். ஆம், அம்பிகை பாய்ச்சிய சூலாயுதம் மேனியில் பட்டதுமே ஞானம் பெற்றான் அசுரன். அவளைக் கை தொழுதான். அம்பிகையும் அவனை மன்னித்து அவன் மீதே ஆனந்த தாண்டவம் ஆடி அருள்புரிகிறாள். அகத்தியர், கௌசிகர் ஆகியோர்களின் நாடிகளிலும் (ஓலைச்சுவடிகள்) மத்தூர் அம்பாளைப் பற்றியும், அவளது வழிபாட்டு முறைகளையும் குறிப்பிட்டுள்ளனர். 

அம்பிகையை வழிபட்டு துலாபாரத்தில் எடைக்கு எடை நாணயம் அல்லது வெல்லம் தருவதாகப் பிரார்த்தித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம். இங்குள்ள தீப பீடத்தில் செவ்வாய், வெள்ளி விளக்கேற்றி வழிபட, நினைத்தது நிறைவேறும். நல்லதையே நினையுங்கள்; நல்லதே நடக்கும். அம்பாள் அபி‌ேஶகத்திற்குப் பால் தந்து வழிபட்டால் சந்தோஶம் பெருகும். பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் மனச்சஞ்சலம் நீங்கும். அமாவாசைதோறும் நடைபெறும் 108 குட பாலாபி‌ேஶகம், பௌர்ணமியில் நடைபெறும் நவகலச ஹோமம், கலசாபி‌ேஶகம், சங்காபி‌ேஶகம் போன்ற வைபவங்களும், நவராத்திரி வழிபாடும் இங்கு மிகவும் சிறப்பான விசேஶங்கள். 

அம்பாளை வழிபட்டு அனைத்து நலன்களும் பெறுவோம்! 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...





கருத்துகள் இல்லை