Recent Posts

மஹா மாரியம்மன் - சர்வசக்தி கருமாரியம்மன் திருக்கோயில்

மஹா மாரியம்மன் 
சர்வசக்தி கருமாரியம்மன் திருக்கோயில் 




செங்கல்பட்டு-மதுராந்தகம் இடையே மதுராந்தகத்திற்கு 4 கி.மீ. முன்னால் சக்களப்பட்டு கூட்டு ரோட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் பாதையில் அரையப்பாக்கம் ஜானகிபுரம் கிராம எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் வயல் வெளிகளினிடையே திருக்கோயில் கொண்டுள்ளாள் சர்வசக்திபுர நாயகி ஸ்ரீசர்வசக்தி கருமாரியம்மன். சக்தி குமார் எனும் கருமாரி உபாசகரிடம் தான் எழுந்தருளும் இடத்தைக் குறிப்பிட, அந்த இடத்தை மூலத்தானமாகக் கொண்டு எழுப்பப்பட்டதுதான் அந்த ஆலயம். இத் திருக்கோயிலின் ஒவ்வொரு அசைவும் தேவியின் அருளாணைப்படியே நிறைவேற்றப்பட்டது. இத்திருக்கோயிலை உருவாக்கத் தேவையான கல் இடம், பொருள், எல்லாம் அம்பிகையாலேயே உணர்த்தப்பட்டு, அவ்வாறே திருக் கோயில் அமைக்கப்பட்டு, தேவி குறிப்பிட்ட நாளன்று கும்பாபி‌ேஶகமும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஆசியளித்துத் தந்த பூரண ஸ்ரீசக்ரமகாமேரு, முறைப்படி நவாவரண பூஜைகள் செய்யப்பட்டு அம்பிகையின் முன்னால் அம்பிகையின் அருளாணைப்படியே பிராணப்பிரதிஶ்டை செய்யப்பட்டு கும்பாபி‌ேஶகமும் அதிவிமரிசையாக நடந்தது. 18 படிகள் ஏறி தேவியின் வாகனமான சிங்கத்தை வணங்கி இடது புறம் திரும்பினால் முழுமுதற் கடவுளான ஸ்ரீநவசக்தி விநாயகர் கம்பீரமாக எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.  அம்பிகையை வலம் வரும்போது தெற்கு நோக்கி அமர்ந்துள்ள 

ஸ்ரீ வாராஹி தேவியைத் தரிசிக்கிறோம். வாராஹி, அம்பிகையின் சேனாநாயகியாகவும், அம்பிகையின் ரதத்தைச் செலுத்துபவளாகவும் திகழ்பவள். அவளின் ரதம் கிரிசக்ர ரதம் என போற்றப்படுகிறது. 

கிரி என்றால் காட்டுப்பன்றி. காட்டுப்பன்றிகளால் இழுக்கப்படும் ரதத்தை செலுத்துபவள். ்வாராஹிக்காரனோடு வாதாடாதே” 

என்று சொல்வதுண்டு. ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில் முதன்மையானவள் .எனவே இவளை உபாசிப்பவர்கள் சொன்ன சொல் உடனே பலிக்கும் அத்தகைய வாக்கு வன்மையை அருள்பவள் அந்த நாயகி. ஸ்ரீ வாராஹி எலும்பின் அதி தேவதை. இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும், வாத, பித்த வியாதிகளும் தீரும். 

பின்னர் மேற்கு நோக்கி காக்ஷிதரும் சோலையம்மன் எனும் நோய்களைத் தீர்க்கும் வைத்தீஸ்வரியின் தரிசனம். தன்வந்த்ரியைப் போலவே கையில் அமிர்தகலசம் கொண்டு இத்தேவி திருவருள்பாலிக்கிறாள். உடல் நோய், மன நோய் போன்ற எல்லா நோய்களையும் நீக்கி பக்தர்களைக் காப்பதில் இவள் நிகரற்றவள். அடுத்து வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராஜமாதங்கியை  தரிசிக்கிறோம். மதங்கமுனிவரின் தவத்திற்கு மெச்சி அவருக்கு மகளாகப் பிறந்த மாதங்கி தேவியின் ஸ்ரீநகர சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பவள். தேவிக்கு மந்த்ரிணீ எனும் பதவியில் திருவருட் பாலிப்பவள். கலைகளின் அதிபதியான ராஜமாதங்கியை உபாசித்தால் ஆயகலைகள் 64கிலும் பாண்டித்யம் பெறலாம்.  

அடுத்து திருச்செந்தூர் முருகன் அழகாகக் காட்சி தருகிறார்.  அவரை வணங்கி கருவறையினுள் நுழைந்தால் அம்பிகையின் அற்புதத் திருக்கோலம்! 

 இத்தலத்தில் ராஜசபை போன்ற அமைப்பில் தேவி தன் பரிவாரங்களோடு அருள்கிறாள். அம்பிகையின் கருவறையின் கதவுகளில் ஸ்ரீவித்யா உபாசனையில் ஆராதிக்கப்படும் பாலாதிரிபுர சுந்தரி, ஸம்பத்கரீ, வாராஹி, புவனேஸ்வரி, அன்னபூரணி, அஶ்டலட்சுமிகள் உட்பட பல்வேறு தேவியரின் திருவுருவங்கள் அழகுற செதுக்கப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கின்றன. 

இந்த சர்வசக்தி கருமாரியின் திருவுருவம் பச்சைக்கல்லால் ஆனது. சூலம், டமருகம், கத்தி, கபாலம் ஏந்தி ஐந்து தலை நாகம் குடைபிடிக்க அழகே உருவாய் அருளே வடிவாய் தேவி எழிற்கோலம் காட்டுகிறாள். தேவியின் முன் மகாமேரு பிரதிஶ்டை செய்யப்பட்டுள்ளது. மகாமேருவில் சர்வ சக்திகளும் அடக்கம். ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்றும் அம்பிகைக்கு மூலிகை நீரால் அபி‌ேஶகம் செய்யப்பட்டு அந்த தீர்த்தம் பிரசாதமாக பக்தர்களுக்குத் தரப்படுகிறது. அது சகல நோய்களையும் போக்கும் அருமருந்தாக பக்தர்களுக்கு விளங்குகிறது.  

இந்த மூலிகைக் குடங்கள் உலக நலனை எண்ணி பிரார்த்தனை செய்யப்பட்டு பின்னரே தேவிக்கு அபி‌ேஶகம் செய்விக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் அம்பிகைக்குரிய சித்திரை மாத வசந்த நவராத்திரி, ஆடி மாத வாராஹி நவராத்திரி, புரட்டாசி மாத சாரதா நவராத்திரி (கொலு வைத்து), தைமாத மாதங்கி நவராத்திரி போன்றவையும் தேவியின் கும்பாபி‌ேஶக தினமான தை மாத புனர்பூச நட்சத்திர தினத்தன்றும் விசேஶ வழிபாடுகள் அன்னபிரசாத விநியோகத்துடன் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன. 

இத்திருத்தலத்தில் அனைத்து தேவ தேவியர்க்கும் அவரவர்க்குரிய யந்திரப் பிரதிஶ்டையும் இவ்வாலயத்தில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் நலம் காக்க மருத்துவமுகாம்களும் விசேஶ நாட்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 6 பௌர்ணமி தினங்களில் இவளை தரிசித்தால் தோஶங்கள் நிவர்த்தியாகி, அனைத்து விருப்பங்களும் கைகூடும் என்பது அன்னையின் அருள் வாக்கு. இதை அனுபவத்தில் உணர்ந்த பக்தர்கள் அம்பிகையின் பெருமையை மெய் சிலிர்க்க கூறுகிறார்கள். 

இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை