Recent Posts

மஹா மாரியம்மன் - சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில்

மஹா மாரியம்மன் 

சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில்



அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியின் வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள எண்ணற்ற வியாதி களை குணப் படுத்தும் அற்புத மருத்துவ ஆலயம் இது. இங்கு அம்மன் 2 அடி உயரத் தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.   

இவ்வூரைச் சுற்றியுள்ள 48 கிராமங் களுக்கும் குலதெய்வமாக விளங்குபவள் இவள். 

அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவதுடன் குழந்தை பாக்கியம், திருமண வரம் ஆகியவற்றுக்காகவும் கை கால் ஊனம், மற்ற உடல் குறைபாடுகள், பிணி பீடை ஆகியன விலகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். விவசாய செழிப்பு, தொழில் விருத்தி, கல்வி மேம்படுதல் போன்ற பிரார்த்தனைகளும் இத்தலத்தில் நிறைவேறுகின்றன.  

தந்தை சொல்படி தாயின் சிரம் கொய்தபின், தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி தந்தையிடம் கேட்க, ஜமதக்னி முனிவர் மந்திரித்த கமண்டல நீரை தர,  அதை பெற்றுக் கொண்ட பரசுராமர் வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறு தலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்துத் தண்ணீரை தெளிக்க உயிர் பெற்றார் ரேணுகா. ஆனால் உடல் மாறியதால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அரக்கியின் சினம் அதிகரிக் கின்றது. அரக்கியை அடக்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதியின் வடிமாக மாரி எழுந்தருளி அருள்பாலிப்பதாகச் சொல் கிறார்கள். இதன் பொருட்டு கர்ப்பகிரகத்தில் அம்மனுக்கு பின்புறம் சந்தனமாரி என்ற பெயரில் நின்ற நிலையில் ஆக்ரோஶமாக ரேணுகாதேவி காட்சி தருகிறாள்.  

இங்கு மஞ்சள், வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமிக்க அபூர்வ தீர்த்தம் தரப்படுகிறது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத்துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மன முருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் இந்த  தீர்த்தத்தைக் குடிக்க அம்மை நோய் அகல்கிறது.  

இங்கு வைகாசி பெருந்திருவிழா 17 நாட்கள் கொண்டாடப் படுகிறது.கொடி ஏற்றம் நிகழ்ந்தபின் சிங்கவாகனத்தில் அம்மன் புறப்பாடும், 8ம் நாள் தீச்சட்டி விழாவும், 9ம் நாள் பால்குடம், பூப் பல்லக்கு விழாவும் பிரசித்தம். அன்று பூக்குழி இறங்குதல் நடை பெறும். அன்று இரவு மலர் பல்லக்கில் அம்பாள் அலங்கார வீதியுலா நடைபெறும்.   

தை மாதப் பிறப்பு, சித்திரை வருடப் பிறப்பு, நவராத்திரி  பொங்கல் தீபாவளி பண்டிகைகளின் போதும் மற்ற விசேஶ தினங்களிலும் கோயிலில் சிறப்பு அபி‌ேஶக ஆராதனைகள் நடை பெறும். விஜய தசமி அன்று வைகை ஆற்றில் அம்பு போடுதல் திருவிழா மிகவும் விசேஶம். அந்த விழாவின் முடிவில் மழை தூறல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயம்.  

உருவம் செய்து தொட்டில் கட்டி நேர்த்திகடன் செய்வது, குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி, பிறகு குழந்தையை எடுத்து கோயிலை சுற்றி வருவது, போன்றவை அடிக்கடி நடக்கும். விவசாயம் செழிப்படைய வேண்டிக் கொண்டவர்கள் தானியங்களை கொண்டு வந்து கொட்டி அம்மனு காணிக்கை செய்வ துடன், தீச்சட்டி, அலகு எடுத்தல், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல், பூக்குழி இறங்குதல், பொங்கல் வைத்தல், முத்துச் சொரிதல் (ஆமணக்கு விதைகளை போடுதல்) முடி காணிக்கை, ஆடு மாடு சேவல்களை காணிக்கை செலுத்தல். ஆயிரம் கண் பானை செலுத்தல், சிலை காணி க்கை, பரிவட்டம் சாற்றுதல், மாவிளக்கு காணிக்கை ஆகியனவும் இத்தலத்தின் புகழ் பெற்ற நேர்த்தி கடன்களாகும். 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை