Recent Posts

மஹா மாரியம்மன் - பொன்மலை - செல்வமுத்து மாரியம்மன்

மஹா மாரியம்மன் 

பொன்மலை - செல்வமுத்து மாரியம்மன் 



பொன்மலை திருச்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத் திலிருந்து மாரியம்மன் கோவிலுக்கு பஸ் வசதி உள்ளது. ஒரு சமயம் பொன்மலை வாழ் இரயில்வே தொழிலாளிகள் தங்களுக்கு தங்க இடம், நல்ல வேலை கிடைத்தமைக்கு நன்றி செலுத்தும் வகையில் (நாகப்பட்டினத் திலிருந்து வந்தவர்கள்) அவ்வூர் மண்ணை எடுத்து வந்து ஒரு சிறிய சூலாயுதத்தை நட்டு தெய்வமாக வழிபட்டனர். 

பொன்மலை பகுதியில் 7000 பேருக்கு மேல் வேலை செய்யும் தொழிற்சாலையும் அவர்களது குடியிருப்புகளையும் செய்து கொடுத் திருக்கிறோம் என்ற இறுமாப்புடனிருந்த வெள்ளைக்காரரின் கனவில் அம்பிகை தோன்றி, இவ்வளவு கட்டியிருக்கியே எனக்கொரு கோவில் கட்டக் கூடாதா? என வினவினாள். வெட்ட வெளியில் இருக்கும் என் சூலாயுதத்திற்கு ஒரு கோவில் எழுப்பினால் இங்குள்ள தொழிலாளர்களையும், தொழிற்சாலை நன்றாக நடக்கவும் அருள் செய்வதாகக் கூறியதைக் கேட்டு நெக்குருகிப் போனார் வெள்ளைக்கார துரை. 

பின்னர் அம்பாளுக்கு கோவில் கட்டி செல்வமுத்துமாரியம்மன் என பெயரிட்டு வணங்கினார். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ ஹனுமான் ஆகி யோருக்கு தனிச் சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் கிழக்குப் பார்த்து அமர்ந்த திருக்கோலத்தில் அருள்கிறாள். 
ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மனுக்கு அபி‌ேஶகம் செய்து எலுமிச்சை மாலை சார்த்தி வழிபட குழந்தை வரம், திருமணம் ஆகிய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இங்கே பிரதோஶ வழிபாடு, புரட்டாசி  வழிபாடு என விழாக்களுக்கு குறைவில்லை. இத்திருத்தலத்தில் 

ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ அலர்மேலுத்தாயார், ஸ்ரீ வேங்கடேச பெருமாள், ஸ்ரீ ராதாகிருஶ்ணன், பொம்மி, வெள்ளை யம்மாளுடன் மதுரை வீரன், ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ விசாலாக்ஷி சுந்தரேஸ்வரர் சந்நதிகளும் உண்டு. 

மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதம், ஸ்ரீ கேதார கௌரி விரதம் மற்றும் நவராத்திரி ஆகியவை சீரும் சிறப்புமாக நடை பெறுகின்றன. பெண்கள் கணவனின் ஆயுளுக்கு ஒரு குறையும் நேரக்கூடாது என்று கேதாரகௌரி விரதமிருந்து அம்மனை வழிபடு கின்றனர், இருக்காது. தம்பதியர் நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழ்வர். 

சித்திரை மாத தேர்த்திருவிழா கண்ணைக் கவரும். பொன்மலை பகுதிவாழ் மக்களுக்கு ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மனே கண்கண்ட தெய்வம். சபரிமலை மற்றும் பழனிக்கு விரதமிருந்து செல்பவர்கள், புதியதாக வீடு,மனை, வாகனம் என வாங்குபவர்கள் அம்மன் ஆலயத்திற்கு வந்து வணங்கி பிறகே வேலை தொடங்குகின்றனர். 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...




கருத்துகள் இல்லை