Recent Posts

மஹா மாரியம்மன் - சிங்கப்பூர் மகா மாரியம்மன் ஆலயம்

மஹா மாரியம்மன் 
சிங்கப்பூர் மகா மாரியம்மன் ஆலயம் 



சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மிகப் பழைமையானது. இங்கு வந்து குடியேறிய தமிழ் மக்கள் மற்றும் நாகப் பட்டினம் மற்றும் கடலூரிலிருந்து வந்த தமிழ் மக்கள் துணையோடு இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. மாரியம்மனே இங்கு முதல் தெய்வம். மூலஸ்தான தெய்வம். இவ்வாலயம் தற்போது சைனா டவுன் என்று அழைக்கப் படும் வட்டாரத்தில் சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. வீட்டுத் தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும், குலதெய்வ மாகவும், நோய் காக்கும் தெய்வமாகவும் இவள் வழிபடப்படுகிறாள். 

சிங்கப்பூரில் இந்திய சமூகத் தலைவராக பணியாற்றிய நாராயண பிள்ளை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இவ்விடத்தில் அமைய வித்திட்டவர். இவரது தொழில் வளரத் தொடங்கியதாலும் நல்ல சுபிட்ச வாழ்க்கை அனைவரும் அமையவும் ஆண்டவன் அருள் வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தினை அமைக்க எண்ணினார். பினாங்கிலிருந்து தமக்குத் தெரிந்த திறமையான தச்சர்களையும் கட்டுமானத் தொழிலாளர்களையும் சிங்கப்பூருக்கு வரவழைத்தார்.  

தமிழ்நாட்டின் கடலூரைச் சேர்ந்த பலர் இவரிடம் வேலை பார்த்தனர். அப்படி வந்தவர்களில் பொய்கையூரைச் சேர்ந்த  பண்டார மும் ஒருவர். இவர் கடலூரில் முத்துமாரியம்மன் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். அவருக்கும் அவரது, உறவினருக்கும் ஊரில் பிரச்சனை ஏற்பட்டதால் அம்பாளை தூக்கிக் கொண்டு பினாங் வந்தார். பிறகு நாராயண பிள்ளையைப் பார்க்க சிங்கப்பூர் வந்தார். அவரது உதவியுடன் அம்பிகைக்கு கோவில் கட்ட எண்ணினார். சிங்கப்பூரிலும் இந்துக்கள் எண்ணிக்கை கூடவே கோவில் அமைப்பதற்கான நிலத்தை கிழக்கிந்திய கம்பெனியே தர முன் வந்தது. 

1827ல் கோவிலின் அடித்தளப் பணி ஆரம்பிக்கப்பட்டது. முதலில் சின்ன அம்மன்” என்ற பெயருடன் சிறு குடில் ஒன்றில் அருள்பாலித்த அம்பிகை பின்னர் மகா மாரியம்மனாக பெரிய கோவில் கட்டப்பட்டு தமிழர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த மூலஸ்தானத்தில் எழுந்தருளி அனைவரையும் காத்தருள்கிறாள். 

மகா மாரியம்மன் ஆலயம் தஞ்சம் என்று வந்தோர்க்கு அடைக் கலம் அருளும் இடமாக அமைந்திருந்தது. ஆலயம் ஆரம்ப காலங்களில் வழிபாட்டுத் தலமாக மட்டும் இல்லாமல் சமூக பணியிலும், பொது மக்கள் தேவைகளுக்கு சேவை செய்வதிலும் தலையாய இடமாகத் திகழ்ந்திருக்கிறது. பிரிட்டிஶ் ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வேலை தேடி வரும் தமிழர்க்கு உதவி நல்கிடும் வேடந்தாங் கலாகவும் இருந்துள்ளது. 

ஒரு நிலையான தொழில், வேலை கிடைக்கும் வரை  கோவிலில் தங்கியிருக்க அனுமதி அளித்துள்ளார்கள். சில சமயங்களில் குறித்த காலத்தில், நேரத்தில் கப்பல் வரவில்லை யானாலும் அபயக்கரம் கொடுத்து உதவியது மாரியம்மன் கோவில். திருமணங்களைச் சட்டப்படி பதிவு செய்யும் பதிவகமாகவும் விளங்கியுள்ளது. தற்போது மருத்துவ முகாம், இந்து சமய நிகழ்ச்சிகள், சமய வகுப்புகள் ஆகியவற்றை நடத்துவதோடு பள்ளி குழந்தைகளின் கல்வி முன்னேற் றத்திற்கும் ஆதரவு நல்கி வருகிறது. 

ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் சைனாடவுன்” பகுதியில்  அமைந் திருக்கும் காரணத்தால் சுற்றுப்புறத்திலிருக்கும் சீனர்களும் மாரியம்மன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். தீமிதி விழாவில் அவர்களின் பங்கு அதிகம். கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய், எலுமிச்சம்பழம் கொடுப்பது, நிதியுதவி வழங்குவது என சீனர்களின் பங்கு அதிகம். அம்பிகை அவளை நம்பியவர்களின் இடர்களை, துயர்களை, நோயினைத் தீர்த்து வைக்கிறாள். கரகம் எடுத்தல், தீமிதி, திரௌபதி அம்மன் திருவிழா, நவராத்திரி என எல்லாம் அம்பிகை அருளால் நன்றாக வருடா வருடம் நடைபெறுகிறது. 1008 சங்காபி‌ேஶகம், மகா சத சண்டியாகம், நவசக்தி அர்ச்சனை என விழாக்கள் எல்லா வெளிநாட்டு மக்களும் வந்து சிறப்பாக கொண்டாடு வது கண்கொள்ளாக் காட்சி. 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...




கருத்துகள் இல்லை